ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
Erode news- ஈரோடு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு அஞ்சல் வழி மற்றும் பகுதி நேர பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.;
Erode news- 2023 - 2024 ம் ஆண்டு 23 வது அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பம் (பைல் படம்).
Erode news, Erode news today- ஈரோடு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு அஞ்சல் வழி மற்றும் பகுதி நேர பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.
ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஈரோடு அடுத்துள்ள கொங்கம்பாளையத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் செயல்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 23வது அஞ்சல் வழி மற்றும் பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விரைவில் துவங்க உள்ளது. இவை புதிய பாடத்திட்டத்தின் படி நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணைய தள முகவரியில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இணைய தளம் மூலம் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற கல்வி தகுதி உடையவராக இருக்க வேண்டும். பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதளமான www.tncuicm.com மூலம் அறியலாம். கூடுதல் விபரங்களுக்கு ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு இணை பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.