ஈரோடு முழுமைத் திட்டம்: பொதுமக்கள் ஆட்சேபனை, ஆலோசனை தெரிவிக்க அறிவுறுத்தல்

Erode news- ஈரோடு முழுமைத் திட்டத்தின் மீதான பொதுமக்களின் ஆட்சேபனை, ஆலோசனைகளை 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2024-03-05 20:15 GMT

Erode news- ஈரோடு முழுமைத் திட்டத்தின் மீது ஆட்சேபனை மற்றும் ஆலோசனை கோருதல் தொடர்பான கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

Erode news, Erode news today- ஈரோடு முழுமைத் திட்டத்தின் மீதான பொதுமக்களின் ஆட்சேபனை, ஆலோசனைகளை 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு முழுமைத் திட்டமானது 731.0 ச.கி.மீட்டர் பரப்பளவிற்கு 1 மாநகராட்சி மற்றும் 109 கிராமங்கள் உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப்பட்டு அரசால் இணக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசால் இணக்கமளிக்கப்பட்ட ஈரோடு முழுமைத் திட்டத்திற்கு ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கான இணையதள சேவை தொடங்கப்பட்டு, இத்திட்டத்தின் மீதான ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் erodemasterplan@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், https://erodedtcp.in என்ற வலையதளத்தில் ஈரோடு முழுமைத் திட்டத்தில் அமையும் கிராமங்களின் பட்டியல் மற்றும் வரைபடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் உள்ளது. மேலும், Erode LPA என்ற பேஸ்புக் மற்றும் Erode-lpa என்ற இன்ஸ்டாகிராம் ஐடி பெயர்களில் ஆகிய இணையதள சேவைகள் மூலமாக பெறப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு முழுமைத் திட்டம் தொடர்பாக ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் கோருதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு முழுமைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்களது ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகளை 60 நாட்களுக்குள் தெரிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலர் ராணி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News