ஈரோடு ஆட்சியரின் மனைவி நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் மனைவி லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2024-07-18 01:00 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் மனைவி லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுன்கரா பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பவ்யா தண்ணீரு. இவர் ஈரோடு வணிக வரித்துறையின் இணை ஆணையராக பணியாற்றி வந்தார்.

தற்போது அவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு நேற்று (17ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் நீலகிரி மாவட்டத்தின் 116வது ஆட்சியரும், 7வது பெண் ஆட்சியரும் ஆவார். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்.

ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, நீலகிரியில் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி. மாவட்டத்தின் பிரச்னைகளை அறிந்து, அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவைகள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News