ஈரோடு ஆட்சியரின் தபேதார் திடீர் உயிரிழப்பு
ஈரோடு ஆட்சியரின் தபேதார் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ஆட்சியரின் தபேதார் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ் (வயது 26). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் தபேதராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி கவுசல்யா (வயது 25). இரு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், வைத்தீஸ் நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டுக்கு சென்று தூங்கினார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்காத நிலையில், அவருடைய மனைவி கவுசல்யா சென்று பார்த்தார். அப்போது, வைத்தீஸ் மூக்கில் நுரை வந்த நிலையில் கிடந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைத்தீஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிந்தது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று வைத்தீசின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பவானிசாகர் போலீசார் வைத்தீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.