பவானியில் பொதுமக்களிடம் இருந்து 82 கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு ஆட்சியர்

Erode news- பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து 82 கோரிக்கை மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.;

Update: 2024-09-19 03:00 GMT

Erode news- பவானி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்த போது எடுத்தப் படம்.

Erode news, Erode news today- பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து 82 கோரிக்கை மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா  தலைமையில் நேற்று (18ம் தேதி) நடைபெற்றது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து, அலுவலர்களுடன் விவாதித்தார். மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 92 மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பவானி கிளைச் சிறையில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News