வாக்களிப்பதன் முக்கியத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்
Erode news- ஈரோட்டில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) துவக்கி வைத்தார்.;
Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்பி பாய்ன்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Erode news, Erode news today- ஈரோட்டில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு பொது மக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், முதல் வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பொது மக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செல்பி போட்டோ பாயின்ட் மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து பதாகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வைக்கப்பட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர், செல்பி போட்டோ பாயின்டில் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் புகைப்படங்கள் எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், தேர்தல் விழிப்புணர்வு குழுவினர்கள் கீதா, ரவிசங்கர் உட்பட ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.