பவானி நிவாரண முகாமில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-08-03 05:30 GMT

பவானி நகராட்சி நடுநிலைப்பள்ளி (கிழக்கு) நிவாரண முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

பவானியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி உட்பட பல இடங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், குறைந்த அளவாக, 1 முதல், 2 அடிக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் வீடுகளிலேயே மக்கள் வசிக்கின்றனர். மிகவும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மட்டும், இரவில் முகாமில் தங்குகின்றனர்.

இந்நிலையில், காவிரி ஆற்றின் கரையோர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பவானி நகராட்சி நடுநிலைப்பள்ளி (கிழக்கு) முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (2ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, பவானி வட்டாட்சியர் தியாகராஜன், பவானி நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News