ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை; ஆட்சியர் அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளார்.;

Update: 2023-09-19 11:15 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அதைத் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:- 

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறத்திலும் கொசு உற்பத்தியாகாத வண்ணம் தண்ணீர் தேங்க கூடிய பொருட்களை அப்பறப்படுத்தவேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள். குடிநீர் தொட்டியினை பிளீச்சிங் பவுடர் கொண்டு தேய்த்து கழுவி காயவைத்து பின்னர் நீர் தேக்கம் செய்ய வேண்டும்.

மேலும் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு வந்து மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் மருத்துவம் பெற வேண்டும். வீட்டிற்கு வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News