ஈரோடு மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை நான்காம் கட்டமாக 577 இடங்களில் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-10-02 13:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (03.10.2021) ஞாயிற்றுக்கிழமை நான்காம் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட 577 இடங்களிலும் இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. நாளை நடைபெறவுள்ள நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதிகளில் 64 மையங்களில் சிறப்பு தடுப்பூசி மையம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாளை கோவிஷூல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News