ஈரோடு மாவட்டத்தில் நாளை 291 இடங்களில் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) 291 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.;

Update: 2021-10-06 10:30 GMT
ஈரோடு மாவட்டத்தில் நாளை 291 இடங்களில்  தடுப்பூசி முகாம்

பைல் படம்.

  • whatsapp icon

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கட்டமாக தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) 291 இடங்களில் 40 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 26 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News