2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பதுக்கல்: 2 பேர் கைது

ஈரோட்டில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-08 10:00 GMT

கைது செய்யப்பட மகேந்திரகுமார் மற்றும் மகேஷ்குமார். 

ஈரோடு கோட்டை முனியப்பன் கோயில் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மகேந்திர குமார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரின் வீடு, கடை மற்றும் குடோன் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதில் குடோனில் மறைத்து வைத்திருந்த 2லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் மகேந்திர குமார் மற்றும் அவரிடம் வாங்கி விற்பனை செய்துவந்த மகேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Tags:    

Similar News