ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல்
ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல் முகாம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசாருக் கான பொது பணியிட மாறுதல் ஆண்டு தோறும் வழங்கப்படும். இதில் 3 ஆண்டுகள் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்குவார். முன்னதாக போலீசாரிடம் இருந்து அவர்கள் செல்ல விரும்பும் போலீஸ் நிலையங்கள் குறித்த விவரம் விண்ணப்பத்துடன் பெறப்படும்.
இந்த ஆண்டு பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் வழங்கப்பட்டது. போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளும் அதற்கு மேலாகவும் பணியாற்றி வரும் முதல் நிலை, 2-ம் நிலை போலீசார், ஏட்டுகள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்கள் மட்டும் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.பொது கலந்தாய்வு முகாம்: ஈரோடு ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. காலை 8 மணிக்கு இந்த கலந்தாய்வு தொடங்கியது. 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் அதிகாரிகள் இந்த கலந்தாய்வை நடத்தினார்கள்.
பட்டியலின்படி போலீசார் ஒவ்வொரு வராக அழைக்கப்பட்டு அவர்கள் விரும்பும் போலீஸ் நிலையம் எது என்று கேட்கப்பட்டது. போலீசார் போலீஸ் நிலையங்க ளின் காலி பணியிடங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அகண்ட திரையில் போலீஸ் நிலையங்கள், அங்கு உள்ள மொத்த பணியிடங்கள், காலிப்பணியிடங்கள், நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் என்ற வரிசையில் போலீசாருக்கு காண்பிக்கப்பட்டது.அதைப்பார்த்து போலீசார் தங்கள் பணியிடங்களை தேர்ந்து எடுத்தனர். அவர்கள் கேட்டும் போது பணியிடம் அந்த போலீஸ் நிலையத்தில் காலி இருந்தால் உடனடியாக அவர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
260 பேருக்கு மாறுதல் : ஒரே காவல் துணைக்கோட்டத்தில் பணியாற்றும் ஒருவர் ஏற்கெனவே பணியாற்றிய போலீஸ் நிலையங்கள் கேட்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும், உடல்நிலை பிரச்னை, குடும்பத்தில் குழந்தைகள் தொடர்பான பிரச்னை இருந்தவர்கள் விரும்பினால் அதே போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து பணியாற்றவும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அனுமதி அளித்தார். சுமார் 300 போலீசார் இந்த கலந்தாய்வுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில், 260 பேர் பணியிட மாறுதல் பெற்றனர்.