சாக்கடை அடைப்பை சரிசெய்த போக்குவரத்து போலீசார்: சமூக வலைதளங்களில் பாராட்டு

மழையால் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை தயங்காமல் சரி செய்த போக்குவரத்து போலீசார் மற்றும் காப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது;

Update: 2022-01-17 10:45 GMT

சாக்கடையை சரி செய்யும் போலீசார்.

ஈரோட்டில் நேற்றிரவு ஒருசில பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக மூலப்பாளையம் சந்திப்பில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெய்த மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து பணியில் இருந்த போக்குவரத்து காப்பாளர் சரவணன் அங்கிருந்த இரும்பு கம்பியால் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்தார். இதனை மருந்தக ஊழியர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

Similar News