ஏ.டி.எம்.,களில் ரூ.1.32 கோடி கொள்ளை சம்பவம்: ஈரோட்டில் மேலும் 4 பேர் கைது

1 கோடியே 32 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் நான்கு பேரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2021-11-11 08:30 GMT

கைதான 4 பேரை அழைத்துச் செல்லும் போலீசார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்கள், ஏ.டி.எம்.களில் பாதுகாப்பாக வைக்கபட்ட 1 கோடியே 32 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் ஸ்ரீனிவாசன் ,கேசவன்,குமார், மணிகண்டன் ஆகிய நான்கு பேரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம்களுக்கு பாதுகாப்பாக பணம் எடுத்து சென்று வைக்க தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஓப்பந்தம் வழங்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு தனியார் நிறுவனத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளை சேர்ந்த 7 ஏ.டி.எம்களில் பணம் எடுத்துச் சென்று வைக்கப்பட்ட பின்னர் அந்த ஏ.டி.எம்.களில் தொடர் கொள்ளையானது அரங்கேறியது.

ஏ.டி.எம் களில் வைக்கப்பட்ட 1 கோடியே 32 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக வங்கிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தனர். குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏ.டிஎம்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணிபுரிந்த பூபாலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஏ.டி.எம் மையங்களில் வைக்கப்பட்ட பணத்தை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தலைமறைவாக இருந்த 5 பேரையும் தேடி வந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பூபாலன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்த ஸ்ரீனிவாசன், கேசவன்,மணிகண்டன், குமார் ஆகிய நான்கு பேரையும் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

Tags:    

Similar News