ஈரோட்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் புதுக்கோட்டை அணி பங்கேற்பு

ஈரோட்டில் தமிழ்நாடு மாநில 2022 சாம்பியன்ஷிப் -33 வது சதுரங்கப் போட்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது;

Update: 2022-09-01 12:30 GMT

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக அணியினர் ஈரோட்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர்

ஈரோட்டில் தமிழ்நாடு மாநில 2022 சாம்பியன்ஷிப் -33வதுசதுரங்கப் போட்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.

சதுரங்க போட்டியில் புதுக்கோட்டைமாவட்ட சதுரங்க கழக அணியினர் கலந்து கொண்டனர் விழாவிற்கு ஈரோடு சதுரங்க கழக செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மனோகரன் மற்றும்சூர்யா இன்ஜினியரிங் காலேஜ் செயலாளர் மற்றும் தாளாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு சதுரங்க கழக பொருளாளர் ரவிச்சந்திரன்  வரவேற்றார் . சிறப்பு விருந்தினராக  ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கலந்து கொண்டு சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்தார் . 13 வயதுக்கு உட்பட்ட மற்றும் மகளிருக்கான பிரிவில்  புதுக்கோட்டை மாவட்டம் சதுரங்க கழகம் சார்பில் அம்சவள்ளி, குருமூர்த்தி, கிருதுதேஷ்வரன், நபீரின்பானு, ஆரிஸ்இம்ரான், பிரபாகரன், சாய்செந்துரேஸ்வரன், ராஷ்மிகாஸ்ரீ, பாலசந்திரோதயன், ஹாசினிவந்தனா ஆகிய பத்து நபர்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து  450  -க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கு பெற்றனர்.  தொடர்ந்து ஐந்து  நாட்கள் போட்டி நடைபெறுகிறது.  நிகழ்வில் தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணை செயலாளர் விஜயராகவன் , புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக துணைச் செயலாளர் புதுகை செல்வம், செயற்குழு உறுப்பினர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அணி மேலாளர் வினிதா செல்வம் உள்ளிட்ட சதுரங்க சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News