நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
ஈரோட்டில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா தாக்கம் காரணமாக கோவில் திருவிழா, திருமணம் மற்றும் அனைத்து வகையான விசேஷங்களும் தடைப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே அனைத்து கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப்போல் கலைஞர்களுக்கு இசைக்கருவி, மூத்த கலைஞர்களுக்கு பென்சன், இலவச பஸ் பாஸ், இலவச வீடு, வீடு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப்போல் அரசு சங்கக் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.