தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மனு
தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆதார் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எளிதில் விளக்கும் விளம்பரங்கள் செய்திட தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆதார் அட்டை புதிதாக பெறுதல், பெயர் திருத்தம் மற்றும் மற்ற திருத்தங்கள் போன்றவை செய்வதில் ஏற்படும் குளறுபடிகள், மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆதார் அட்டை பெறுவது பற்றிய தகவல்களை மக்கள் தங்கள் தேவைகளுக்காக அடிக்கடி வந்து செல்லும் இடங்களான அரசு அலுவலங்கள், பொதுத்துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் முதலான இடங்களில் விளம்பர பலகைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்படாமலும், வீண் அலைச்சல்கள் ஏற்படாமலும், அதனால் மன உளைச்சல்களுக்கு ஆட்படாமலும், வீண் பணவிரயம் ஏற்படாமலும் இருக்கவும், ஆதார் அட்டை சிரமமின்றி பெறுவதற்கும் வழிவகை செய்ய வேண்டி தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.