ஈரோட்டில் விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பெற்றோர் தர்ணா

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பெற்றோர், தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-02 14:15 GMT

ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை பள்ளி நிர்வாகம் மூடியுள்ளது. இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்த மாணவர்கள்,  தமிழகத்தில் பிரபலமான கல்லூரியில் இலவச கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது படிக்கும் மாணவர்கள் முறையாக விளையாட்டு பயிற்சி செய்வதற்கு போதுமான வசதி இன்றி தவித்து வருவதாக புகார் தெரிவித்தும், உடனடியாக பள்ளி நிர்வாகம் விளையாட்டு மைதானத்தை திறந்துவிட்டு மாணவர்கள் விளையாட்டு பயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என, பள்ளியின் முன்பு பெற்றோர்கள் இன்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News