ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்

நிர்வாகிகளுக்கு நல்லொழுக்க சிந்தனைக்கான யோகா, மூச்சுப்பயிற்சி, நமது தர்ம கலாசாரம் குறித்த போதனை போன்ற பயிற்சியளிக்கப்பட்டது;

Update: 2022-10-30 11:00 GMT

இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்ஞாயிற்றுக்கிழமை ரங்கம்பாளையம் எம்.ஜெ.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்இன்று 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை ரங்கம்பாளையம் எம்.ஜெ.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

மாவட்ட தலைவர் ப .ஜெகதீசன் தலைமையில் , செந்தில் பில்டர்ஸ் ஆர். செந்தில் ராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சி.பி. சண்முகம் பங்கேற்று பேசியதாவது: இந்து முன்னணி சார்பில், நடத்தப்படும் இந்த முகாம், பொறுப்பாளர்கள் உத்வேகத்துடன் பணி செய்வதற்கான உணர்வை ஏற்படுத்துதல். பாரதத்தின் இந்து கலாசாரத்தை பேணிக்காத்திடுவது. இழந்தநிலப்பரப்பை மீட்பது. கோவில்களையும், கோவில் சொத்துகளையும், ஆலய வழிபாட்டு முறையை பாதுகாத்திடுவது உள்ளிட்ட தீர்மானங்களை முன்னிறுத்தியே நடத்தப்படுகிறது. அமைப்பின்நிர்வாகிகளுக்கு நல்லொழுக்க சிந்தனைக்கான யோகா, மூச்சுப்பயிற்சி, நமது தர்ம கலாச்சாரம் குறித்த போதனை,ஆலய பாதுகாப்பு மற்றும் சுத்தம் இந்து மக்கள் பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்ற  நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பொறுப்பாளர்களுக்கான இறைவழிபாடு , யோகா , கட்டுப்பாடுகள் , இந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது , கிளை கமிட்டி அமைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது இதில்  மாவட்ட நகர ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இறைவழிபாடு என்றால் என்ன:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு-இந்த உலகம் எப்பொழுது தோன்றிற்று, எப்படித் தோன்றிற்று என்பதைஇன்றுவரை யாராலும் தீர்மாணித்துக் கூற இயலவில்லை. இந்த உலகத்தைத்தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது மாத்திரம் எல்லோராலும்ஏற்றுக்கொள்ளப்பட்டது.குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுக்கும் பொழுது, எப்படி 'ஆ,ஆ'என்று கற்றுக்கொடுக்கும்போது, எப்படி 'அ', என்பதை முதல் எழுத்தாக வைத்துக்

கற்றுக் கொடுக்கிறோமோ, அதுபோல் ஆதிபகவானை முதன்மையாக வைத்து இந்த உலகம் படைக்கப்பட்டது என்று  தெளிவாகக் கூறியுள்ளார்கள் திருக்குறளிலே. ஆகவே ஆதி பகவான் ஒருவர் இருந்துள்ளார். அவர் மூலமாகவே இந்தஉலகம் படைக்கப்பட்டுள்ளது என்பதில் இரண்டு கருத்துகள் இருப்பதற்கு வழியே கிடையாது. அந்த வகையிலே, உலகம் ஒரு ஆண்டவனுடைய செயலாக செயல்பட்டு வருகிறது.

அந்த ஆண்டவன்எங்கும் நிறைந்துள்ளவன், சர்வத்தையும் படைக்கும் சக்தி உடையவன்,எல்லோருக்கம் ஆனந்தத்தையும் இன்பத்தையும் அளிக்கக்கூடியவன், ஞானவடிவமானவன், ஜோதி வடிவமனாவன்.  எங்கும் நிறைந்துள்ளபரம்பொருளாகக் சொல்லப்பட்டிருக்கிற பரமாத்மாவை ஆதி பகவன் என்றசொல்லால் திருக்குறளிலே திருவள்ளுவர் வர்ணிக்கிறார்.உலக வாழ்க்கையிலே பலவிதமான சமுதாயங்களை நாம் பார்க்கிறோம்.மக்கள் சமுதாயம், பிராணிகள் வட்டம், உயிரினங்கள் இப்படிப் பலவிதமானவற்றை நாம் பார்க்கிறோம். அவைகளிலே, மற்ற யாருக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்புமனிதனுக்குக் கிடைத்திருக்கிறது.

உயிரினங்கள் இருக்கின்றன - மரங்கள் போன்றவைகள் - பிராணிகள் இருக்கின்றன - பறக்கக்கூடியவை. நகரக்கூடியவைபல வகைகள் . இவைகளுக்கெல்லாம் கூட இல்லாத ஒரு சிறப்பு அம்சம்மனிதனுக்கு உண்டு. அதுதான் பகுத்தறிவு. விசேஷ சக்தி என்று சொல்வார்கள்.மற்ற எந்த உயிரினத்துக்கும், எந்தப் பிராணிக்கும் நல்லது எது, தீயது எது என்றுஅறிந்து கொள்ளக்கூடிய சக்தி இல்லாமல், நல்லதை ஏற்றுக்கொள்ளுதல், தனக்குவேண்டாததை, தீயதை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் இந்த சக்தி வரைக்கும்எல்லா உயிரினங்களுக்கும் உண்டு.

ஆனால் மனிதன் நல்லது எது, தீயது எதுஎன்று அறிந்து கொண்டு, தீயதை விட்டுவிடுவதோடு அல்லாமல், நல்லதைஏற்றுக்கொள்வது மாத்திரமல்லாமல், தீய வழிக்கே செல்லாமல் நல் வழியிலேயேநின்று வாழ்க்கை நடத்துவதற்கும் ஒரு தனிச்சிறப்பு உடையவனாக மனிதன் ஆகுகிறான். ஆகவே எங்கும் நிறைந்துள்ளஒரு சக்தி, பரம்பொருளுடைய சக்தி, ஆண்டவனுடைய சக்தி, புத்தியிலேயும்இருக்கிறது.அந்த புத்தி சக்தியை வைத்துக்கொண்டுதான் மனிதனுடைய வாழ்க்கையேநடைபெறுகிறது. புத்தி தவறிப் போகும்போது வாழ்க்கை தவறிப்போகிறது. புத்திநேராக இருக்கும்போது வாழ்க்கை நன்றாக ஆகிறது.

ஆகவேதான் எல்லாவிதமான உபதேசங்களும், சொற்பொழிவுகளும் நல்ல உபதேசங்கள்அனைத்தும் மனிதனுக்குச் சொல்லப்பட்டு, அவைகள் கடைப்பிடிக்கப்பட்டு,வருவதற்கு வேண்டிய முயற்சிகள் எல்லாம் நடைபெற்று வருகிறது.அதைத்தான் ஆண்டவனுடைய வழிபாடு என்கிறோம். உலகத்திலே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. தலை வலிவந்தால் அதற்கு உடனடியாக இந்த விஞ்ஞான உலகத்திலே மாத்திரையைச் சாப்பிடுகின்றோம். ஊசி போட்டுக் கொள்கிறோம். டாக்டரிடம் காண்பித்துப் பலவிதமான மருந்துகளை எடுத்துக் கொண்டு பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளுகின்றோம்.ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாதஅளவில் வரும்போது "ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும்." என்றுஅனைவரும் கைவிட்டுவிட்ட நிலையிலே ஆண்டவனைத் தான் அழைக்கிறார்கள்.அதை இந்த விஞ்ஞான யுகத்திலும் நாம் பார்க்கிறோம்.

இதைத்தான் அந்தக்காலத்திலிருந்து அற நூல்களும் கூறியிருக்கின்றன. அனுபவித்த மகரிஷிகளும்,பெரியோர்களும் கூட இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையிலே ஆண்டவன் ஒருவனைத் தவிர இந்த உலகிலே, மனதிற்கு அமைதியும் சாந்தியும், துன்பத்தை அகற்றுவதற்கான வழியையும் வேற யாராலும் கொடுக்க முடியாது.ஆனால் அந்த ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாகஇருக்கும்பொழுது, அவனை நம்மால் மனத்திலே இருத்தி, வழிபட்டு, தியானம் செய்து, அருளைப் பெறுவது என்பது சாமானிய மக்களால் முடியாது.

அதைவைத்துத்தான் 'அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய்' என்றுபலவகையிலே சொல்வார்கள். அந்த ஆண்டவனே அருவமாயிருப்பதுடன்உருவமாய் வந்து, அந்த உருவமும் பல வகையாக வந்து நமக்கெல்லாம் அருள்பாலிக்க முருகன் வந்தது போல், கந்தக் கடவுள் வந்தது போல், உலகிலுள்ள அனைத்து வடிவங்களையும் நாம் காண்கிறோம்.

ஆண்டவன் ஒருவன்தான்.அதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் இல்லை.ஆனால் ஆண்டவனுடைய வடிவங்களும், ஆண்டவனுடைய அருட்செயல்களும் பல வடிவங்களிலே வருகின்றன. உதாரணமாக, நம்முடையஇந்து சமயத்தை எடுத்துக்கொண்டால் ஒரே ஆண்டவன்தான். அந்தஆண்டவனை அடைவதற்கு வழி வகையாக, உருவ வழிபாடுகளெல்லாம் இந்துசமயத்தில் பழங்காலந்தொட்டு வந்து கொண்டிருக்கிறது.


Tags:    

Similar News