ஈரோட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்த 3 ஆயிரம் பேரின் மோட்டார் பைக் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட எஸ்பி அறிவித்திருந்தார்

Update: 2021-10-13 23:50 GMT

ஈரோடு மாவட்டத்தில் போலீஸாரால்  ஒரே நாளில் பறிமுதல் செய்ய  இரு சக்கர வாகனங்கள்

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு இன்று அமலுக்கு வந்தது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.



ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை. ஈரோடு ஸ்வஸ்திக் கார்னர், ஜி.எச் ரவுண்டானா, கருங்கல்பாளையம் உட்பட ஏழு இடங்களில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர்

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் டவுன் டி எஸ்.பி. ஆனந்தம் தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை நிற்க வைத்து அவர்களின் வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டு அபராதம் விதித்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மாநகர் பகுதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப்போல் கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் போக்குவரத்தை போலீசார் தனித்தனியாக சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து, அவர்களுக்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் லைசென்ஸ் இல்லாமல் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்தனர். கோபி பகுதியில் இன்று காலை நிலவரப்படி 350 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப்போல் அம்மாபேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அம்மாபேட்டை பகுதியிலும் 300 வாகனங்களுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் நாள் என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிறிது நேரம் வைத்து விட்டு அந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் இருசக்கர வாகனம் கண்டிப்பாக பறிமுதல் வயது அனுப்பி வைத்தனர்.

பெருந்துறை, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி என மாவட்டம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர் இன்று மாவட்டத்தில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சிறிது நேரத்தில் உரியவர்களிடம் வாகனம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இன்று மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News