ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்
இந்த முகாமில் 986 இடங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் 5வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த முகாமில் 986 இடங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஈரோடு மாநகராட்சி பகுதியில் 101 இடங்களில் 26 ஆயிரம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனோ தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.