ஈரோடு மாவட்டத்தில் நாளை 993 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை ஐந்தாம் கட்டமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு.;
தமிழகம் முழுவதும் நாளை 10.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நாளை 993 இடங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.