மதுக்கடையால் 'குடி'மகன்களுக்கு கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு திண்டாட்டம்
அவல்பூந்துறை அருகே லட்சுமி நகரில், மையப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே, அவல்பூந்துறை செல்லும் வழியில் உள்ள லட்சுமி நகரில் பொது மக்கள் குடியிருப்பு மையப்பகுதியில் மதுபானக்கடை அமைந்துள்ளது.
பொதுமக்கள் குடியிருப்பு அருகாமையில், மையப்பகுதியில் உள்ள மதுபான கடையில், மதுப் பிரியர்கள் மது அருந்திவிட்டு சாலையில் அமர்ந்து கொண்டு, தகாத வார்த்தைகள் பேசி வருவதாலும், பெண்களைக் கேலி கிண்டல் செய்து மதுபாட்டில்களை உடைத்து அராஜகம் செய்து வருவதாலும் பலரும் அஞ்சுகின்றனர். கல்லூரி மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் முகம் சுளித்து நிலைமை உருவாகியுள்ளது.
இப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற, ஈரோடு மாவட்ட ஆட்சியர் முதல், முதல்வரின் தனிப்பிரிவு வரை, புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.