முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு
முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார்
முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 – ஆம் ஆண்டு மே மாதம் 21 – ஆம் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும் புதூரில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாககுதலில் படுகொலை செய்யப்பட்டார் . அவருடன் மேலும் பலர் கொல்லப்பட்டனர் . இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பேரறிவாளன் என்பவர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .
இந்தநிலையில் பேரறிவாளன் 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனைக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் . பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோர் விடுதலைக்கு உதவிய அவரது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்கள் .
அதன்படி, பேரறிவாளன் தனது தாயாருடன் ஈரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனை அவரது வீட்டில் சந்தித்தார் . பேரறிவாளனை முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி மற்றும் அவருடைய கணவர் ஜெகதீசன் ஆகியோர் வரவேற்றனர் . அவர்களுடன் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் உடன் இருந்தனர்