ஈரோடு மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் லி.மதுபாலன் , மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பெ.பிரேமலதா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சோமசுந்தரம், இணை இயக்குநர் (பொ) (மருத்துவ பணிகள்) மரு.ரவீந்திரன், மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.பிரகாஷ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கெட்ஸி லீமா அமாலின் உட்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள்ஆகியோர் கலந்துகொண்டனர்.