ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடின
ஈரோட்டில் ஞாயிறு ஊரடங்கு காரணமாக பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீது வழக்கு பதிவு;
ஈரோட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஊரடங்கில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் முக்கிய சந்திப்புகளான அரசு மருத்துவமனை ரவுண்டானா,காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு,பேருந்து நிலைய சந்திப்பு,சூளை ,கனிராவுத்தர் குளம் ஆகிய பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அரசு விதிமுறைகளை மீறி வெளி சுற்றும் நபர்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் நேற்று மட்டும் 1066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது