மனுத்தாக்கல் வேட்பாளருடன் இணைந்து 5 பேர் மட்டும் அனுமதி..!

மனுத்தாக்கல் வேட்பாளருடன் இணைந்து 5 பேர் மட்டும் அனுமதி.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-09 06:00 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாளை வேட்பு மனுத்தாக்கல் துவங்கும் நிலையில், வேட்பாளருடன் சேர்ந்து, 5 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்யும் அறையில் அனுமதிக்கப்படுவர்.

வேட்பு மனுத்தாக்கல் நாட்கள் மற்றும் நேரம்

10, 13, 17 ஆகிய நாட்கள்

காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை

வேட்பு மனுத்தாக்கல் விவரங்கள்

பொது வேட்பாளர்கள் 10,000 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்

வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்யும் இடத்தில் அனுமதிக்கப்படுவர்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் கட்சியின் லெட்டர் பேடில் பரிந்துரையும், ஒரு வாக்காளர் முன்மொழிதலும் வழங்க வேண்டும்

சுயேட்சை உள்ளிட்ட பிற வேட்பாளர்கள் 10 வாக்காளர் முன்மொழிதல் வழங்க வேண்டும்

தனியாக அலுவலர்கள் நியமனம்

வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாக வேட்பு மனுவை சரி பார்த்து வழங்க தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மனுவை சரி பார்த்து உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதையும், பூர்த்தி செய்யப்பட்டதையும் உறுதி செய்து மனுத்தாக்கலுக்கு உள்ளே அனுமதிப்பர்.

வேட்பு மனு பதிவிறக்கம் தகவல்

வேட்பு மனுக்கள் இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மணீஷ் தகவல்

Tags:    

Similar News