நகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க இடம் தேர்வு..! முக்கிய பணி தீவிரமாக நடைபெறுகிறது..!
நகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க இடம் தேர்வு.முக்கிய பணி தீவிரமாக நடைபெறுகிறது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஈரோடு மாநகராட்சியின் வாகனங்கள்
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 250 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கொசு புகை பரப்பும் இயந்திரம், ஜெனரேட்டர் உள்ளிட்டவையும் இயக்கப்படுகின்றன.
ஆண்டுக்குத் தேவையான எரிபொருள்
இவை அனைத்துக்கும் சேர்த்து, ஆண்டிற்கு, 15 லட்சம் லிட்டர் டீசலும், ஒரு லட்சம் லிட்டர் பெட்ரோலும் தேவைப்படுகிறது.
பெட்ரோல், டீசல் கொள்முதல்
தற்போது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மாநகராட்சி, பெட்ரோல், டீசலை மொத்தமாக கொள்முதல் செய்கிறது.
மொத்த கொள்முதல் விற்பனையில் உள்ள சிக்கல்
பொதுத்துறை நிறுவனங்கள், சில்லரை விற்பனையை விட, மொத்த கொள்முதல் விற்பனையில், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தினால் மாநகராட்சிக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.
மாநகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு
இந்த இழப்பை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டிற்கு மாநகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரி கூற்று
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, "மாநகராட்சிக்கு தேவையான எரிபொருளை பெறும் நோக்கிலும், வருவாயை மிச்சப்படுத்தும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பெட்ரோல் பங்க் அமைக்க தேவையான அனுமதிகள்
இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் என்ஓசி பெறுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி குறிப்பிட்டார்.