மோசடி புகாருக்கு வந்த பெண் மயக்கமாகி விழுந்து சிகிச்சை..!

மோசடி புகாருக்கு வந்த பெண் மயக்கமாகி விழுந்து சிகிச்சை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-07 11:13 GMT

ஈரோடு, கோபி, கணக்கம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆண்டவர் மனைவி தனலட்சுமி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்க வந்தவர், வளாகத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட போலீசார், மனுவை பெற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.

மனு விபரம்:

எங்களது ஊரை சேர்ந்த சிலர், என்னிடமும், எனது கணவரிடமும், 60,000 ரூபாய் ரொக்கப்பணம் உட்பட, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணம், பொருட்களை வாங்கி சென்றனர். வேறு சிலரிடமும் 8 லட்சம் ரூபாய் வரை பெற்று கொண்டு, பணத்தை தர மறுக்கின்றனர்.

போலீஸ் நடவடிக்கை குறித்து புகார்

இதுபற்றி பங்களாபுதுார் போலீசாரில் புகார் செய்தும், அவர்களுக்கு சாதகமாக போலீசார் நடந்து , எங்களை சமாதானமாக செல்லும்படி பேசுகின்றனர்.

கணவரின் உடல்நிலை பாதிப்பு

இப்பிரச்னையால் கணவர் உடல் நலம் பாதித்து கவலைக்கிடமாக உள்ளார். இதுபற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால், எனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News