மதுக்கடையை நிறுத்தக் கோரி மக்கள் களமிறங்கினர்: குடிமக்களின் கோப வெடிப்பு..!
மதுக்கடையை நிறுத்தக் கோரி மக்கள் களமிறங்கினர்: குடிமக்களின் கோப வெடிப்பு அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கனி ராவுத்தர் குளம், காந்திநகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை ஒட்டி தின்பண்ட விற்பனை கூடத்தில் சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
24 மணி நேர மது விற்பனை
மதுக்கடை அருகே வீடு வாடகைக்கு எடுத்து அங்கு 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறி அந்த பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் நடவடிக்கை
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுக்கடையை ஒட்டி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்த இடத்தில் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர்.