குறைந்தபட்ச ஊதியம் கோரி வரும் 7-ஆம் தேதி காத்திருப்பு போராட்டம்..!

குறைந்தபட்ச ஊதியம் கோரி வரும் 7-ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-02 12:30 GMT

ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பேசியவர்கள்

♦ ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் குணசேகரன்

♦ சங்க மாவட்ட செயலாளர் மணியன்

♦ துணை தலைவர் மூர்த்தி

♦ துணை செயலாளர் ஞானசேகரன்

♦ பொருளாளர் ரவி உட்பட பலர்

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்கள்

♦ துாய்மை பணியாளர்கள் - தினக்கூலி

♦ கொசு ஒழிப்பு பணியாளர்கள் -  தினக்கூலி

ஓட்டுனர்கள் -  தினக்கூலி

குடிநீர் வினியோக பணியாளர்கள் -  தினக்கூலி

துாய்மை காவலர்கள் -  தினக்கூலி

மகளிர் குழு  - தினக்கூலி

இவர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம், சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை.

பணியாளர் கோரிக்கைகள்

♦ ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு, 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

♦ குறைந்த பட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க வேண்டும்.

♦ இ.எஸ்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

♦ துாய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்க வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 7ல் சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன் நடக்கும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

Similar News