ஈரோட்டில் புதிய மஞ்சள் உற்பத்தி அதிகரிப்பு..! பழைய மஞ்சளுக்கு சந்தையில் மந்தநிலை..!
ஈரோட்டில் புதிய மஞ்சள் அறுவடை துவக்கம் விலை குறைவதால் பழைய மஞ்சள் விற்பனை அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில், மஞ்சள் அறுவடை ஓரிரு இடங்களில் துவங்கியுள்ளதால், விலை குறையும் என்ற நோக்கத்தில், பழைய மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளது.
கடந்த, 2011க்கு பின் மஞ்சள் விலை அதிகம் உயராததால், பழைய மஞ்சளை அதிகம் இருப்பு வைத்தனர். புதிய மஞ்சள் மட்டும், அப்போதைய விலையில் விற்பனையானது.
ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கருத்து
ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: நடப்பாண்டில் புதிய, பழைய மஞ்சளுக்கு ஓரளவு விலை கூடுதலாக கிடைத்து வருகி-றது. கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் விலை அதிகம் என்-பதால், கையிருப்பில் உள்ள பழைய, புதிய மஞ்சளை விவசா-யிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தபடி உள்ளனர்.
புதிய மஞ்சள் அறுவடை
ஒவ்வொரு ஆண்டும் ஜன., 15ஐ முன்னிட்டு, புதிய மஞ்சள் அறு-வடை அதிகரிக்கும். நடப்பாண்டில் கடந்த சில நாட்களாக, ஒரு சில இடங்களில் புதிய மஞ்சள் அறுவடை நடந்து, 'பிராசசிங்' பணிகள் நடந்து வருகிறது.
புதிய மஞ்சள் வரவு
ஜன., 10க்கு பின் அறுவடை அதிக-மாகி, புதிய மஞ்சள் வரத்தாகும். அப்போது புதிய மஞ்சள் விலை உயரும் என்பதுடன், அவற்றையே வியாபாரிகள் ஆர்வமாக வாங்கி செல்வர்.
பழைய மஞ்சள் விற்பனை
எனவே, பழைய மஞ்சளை நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்ற நோக்கில், தற்போது அதிகமாக வரத்தாகிறது. இதனால் குறைந்தபட்ச விலை குவிண்டால், 6,500 முதல், 8,000 ரூபாய்க்கு விலை போகிறது.
மற்ற மாநிலங்களில் மஞ்சள் அறுவடை
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்திலும் ஜன., 15க்கு பின்னரும், மஹராஷ்டிராவில் மார்ச் மாதமும் அறு-வடை துவங்கும். அப்போதுதான் அதிகமாக புதிய மஞ்சள் வரத்-தாகும்.
தமிழக புதிய மஞ்சளுக்கு வரவேற்பு
அதுவரை தமிழகத்தின் புதிய மஞ்சளுக்கு வரவேற்பு இருக்கும், கூடுதல் விலை கிடைக்கும்.இவ்வாறு கூறினார்.