சூரிய சக்தி மூலம் தென்னை நாா் பொருள்களின் உற்பத்தி..! 50% மானியம் வழங்கும் புதிய திட்டம்..!
சூரிய சக்தி மூலம் தென்னை நாா் பொருள்களின் உற்பத்தி.50% மானியம் வழங்கும் புதிய திட்டம் பற்றி இப்பதிவில் காணலாம்.
தென்னை நாா் சாா்ந்த பொருள்களை சூரிய சக்தி மின்சாரம் மூலம் உற்பத்தி செய்ய 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு சங்கத்தின் 21 மாவட்ட நிா்வாகிகள் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம், சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முக்கிய தீா்மானங்கள்
விவரம் எண்ணிக்கை / மதிப்பு
தமிழ்நாட்டில் உள்ள கயிறு பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் - 535
கிராமப்புற தொழிலாளா்கள் பயனடைவோா் - 2,50,000
ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு - ரூ.7,800 கோடி
ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு - ரூ.2,800 கோடி
தமிழ்நாட்டில் உள்ள கயிறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் கயிறு குழுமங்கள் - 21
முக்கிய கோரிக்கைகள்
♦ 112 கிலோ வாட்ஸ் வரை சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய அரசு 50% மானியம் வழங்க வேண்டும்.
♦ இரட்டை பிரி கயிறு திரிக்க 15 கிலோ வாட் வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மாதம் 2000 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
♦ தென்னை நாா் சாா்ந்த பொருள்களை காட்சிப்படுத்த, விற்பனை செய்ய கோவையில் உள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
♦ தென்னை நாா் பொருள்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.
♦ பசுமை குடில் அமைக்க தென்னை நாா் துகள்களை பயன்படுத்த தனி நிதி ஒதுக்க வேண்டும்.
♦ தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்துக்கு இந்த ஆண்டு சிறப்பு நிதியாக ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள் 75 போ் கலந்து கொண்டனா். முடிவில் சங்க செயலாளா் அருண் நன்றி கூறினாா்.