தீபாவளியையொட்டி ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

Update: 2021-10-15 10:45 GMT

தீபாவளி பண்டிகை,  வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இப்போழுதே கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, ஆர் கே வி ஈரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வழிப்பறி, பிக்பாக்கெட் நடைபெறும். இதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் முக்கியமான கடைவீதியில் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து,  அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு,  மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில்,  பஸ் நிலையம், மேட்டூர் சாலை, எம்.எஸ். சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, ஆர்.கே.வி, ஜி.எச். ரவுண்டானா உள்பட 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்ட உள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் போலீசார் கண்காணிப்பு கோபுரம் மூலம் மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பார்கள் என்றனர்.

Tags:    

Similar News