தீபாவளி பண்டிகை: பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-02 04:45 GMT

ஈரோடு கடைவீதியில் குவிந்த பொதுமக்கள்.

ஈரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீர்செய்யும் விதத்தில் போக்குவரத்து காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் தீ விபத்து தவிர்ப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக தீயணைப்பு மற்றும் மருத்துவதுறையினருடன் இணைந்து பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை சார்பில் பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கால பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு நகர முக்கிய இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 15 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு செய்திகள் ஒலிப்பரப்பபட்டு வருகின்றன. ஈரோடு மாவட்ட பொதுமக்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், பட்டாசுகள் வெடிக்கும் போது பாதுகாப்புடன் இருந்து தீபாவளியை கொண்டாடுமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

Tags:    

Similar News