ஈரோடு மாவட்டத்தில் நாளை 266 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 44 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.;

Update: 2021-10-19 16:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாநகராட்சியில் 10 நகர்ப்புற சுகாதார மையங்களிலும், சத்தி, பவானி நகராட்சி பகுதிகளில் உள்ள 2 நகர்ப்புற சுகாதார மையங்கள் , கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நகர்புற சுகாதார மையம், புறநகர் பகுதியில் உள்ள 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் மொத்தம் 266 இடங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் 44,850 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News