ஈரோடு மாவட்டத்தில் நாளை 255 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.;
கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) 255 இடங்களில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 22 இடங்களில் 8 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.