சிஎஸ்ஐ சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிருத்துவர்கள்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பழமை வாய்ந்த சிஎஸ்ஐ சர்ச்சில், திரளான கிருத்துவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.;
ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் புத்தாண்டை வரவேற்க, பிரப் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ.,சர்ச் முன், பொதுமக்கள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் இரவு, 11:00 மணி முதல் குவியத் தொடங்கினர். நள்ளிரவு, 12:00 மணிக்கு சர்ச்சில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின் மூலம், புத்தாண்டு பிறப்பு கவுன்டவுன் மூலம் அறிவிக்கப்பட்டது. அடுத்த வினாடியே அனைவரும் ஆரவாரம் செய்தனர். வண்ண பலூன்களை பறக்க விட்டனர். கூடியிருந்த மக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஊர்காவல் படையினர் என, அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதேபோல மாநகரின் முக்கிய வீதிகளில் தங்களது வீடுகளுக்கு முன்பு பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
சிஎஸ்ஐ சர்ச் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, கூட்டு பிரார்த்தனை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதுடன், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பு வழிபாடு நடத்த அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. பிரார்த்தனைக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ள தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டது.