ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 550 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும், தவணை பூஸ்டர் தடுப்பூசியை 550 நபர்கள் செலுத்திக் கொண்டுள்ளனர்.;

Update: 2022-01-10 15:45 GMT

ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும் மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசியை 550 நபர்கள் செலுத்திக்கொண்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,  மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி செலுத்தும் பணியானது,  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவ்வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட 550 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 88 சதவீதம் நபர்கள் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News