கோபி: வாய்க்காலில் விழுந்து பைக் மெக்கானிக் உயிரிழப்பு

கவுந்தப்பாடி, பெருந்தலையூர் அருகே உள்ள வாய்க்காலில் விழுந்து, பைக் மெக்கானிக் உயிரிழந்தார்.;

Update: 2021-12-09 12:45 GMT

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. பைக் மெக்கானிக். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், ரங்கசாமி கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் பகுதி  வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, புகாரின் பேரில்,  கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News