ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை!
ஈரோட்டில் ஆயுத பூஜையையொட்டி, முக்கிய கடை வீதிகளில் பூஜை பொருட்கள் மற்றும் பழங்களின் விற்பனை களைகட்டியது
நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஆர்.கே.வி. கடைவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதிகளில் வழக்கத்துடன் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் அதிகாலையிலிருந்தே, மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. வெள்ளைப் பூசணிக்காய் மக்கள் அதிக அளவு வாங்கி சென்றனர்.இதேபோல், மா, தென்னை தோரணம், வாழை கன்று போன்றவற்றையும் மக்கள் வாங்கிச் சென்றனர்.
இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, கோபி என மாவட்டம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.