விவசாயிகள் மேம்பாட்டிற்காக எப்போதும் துணை நிற்போம் : ஆற்றல் அசோக்குமார் உறுதி

விவசாய மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஆற்றல் அறக்கட்டளை முழுமையாக பங்கேற்கும் என அதன் தலைவர் அசோக்குமார் உறுதிபட தெரிவித்தார்.;

Update: 2023-08-08 09:00 GMT

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் பத்தாவது நாள் தொடர் ஆர்ப்பாட்டம் அறச்சலூர் சென்னசமுத்திரம் பிரிவு கால்வாய் அருகில் நடைபெற்றது.

விவசாய மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஆற்றல் அறக்கட்டளை முழுமையாக பங்கேற்கும் என அதன் தலைவர் அசோக்குமார் உறுதிபட தெரிவித்தார்.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் பத்தாவது நாள் தொடர் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 7 மணி அளவில் அறச்சலூர் சென்னசமுத்திரம் பிரிவு கால்வாய் அருகில் நடைபெற்றது. கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். கீழ்பவானி விவசாய சங்க தலைவர் நல்லுசாமி முன்னிலையில் நடைபெற்ற நிறைவு நாள் ஆர்ப்பாட்டத்தில், போராட்டக்காரர்கள் அனைவரும் காலை உணவு அருந்தி போராட்டத்தை நிறைவு செய்தனர். கூட்டத்தில் ஆற்றல் அசோக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

கொங்கு மண்டலத்தில் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கான பிரச்சினை இருந்தாலும், விவசாய மக்களின் முக்கிய பிரச்சனைகளிலும் ஆற்றல் அறக்கட்டளை முழுமையாக பங்கேற்று முழு ஒத்துழைப்பை வழங்கும். கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் கடந்த பத்து நாள் தொடர் போராட்டத்தின் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னெடுத்து வைத்துள்ளது. விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் இந்த அமைப்பின் கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துவதோடு விவசாயிகள் மேம்பாட்டிற்காக எப்போதும் துணை நிற்போம் என்பதை இதன் மூலம் உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.

மேலும், அறச்சலூர் கவிமஹாலில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கீழ் பவானி பாதுகாப்பு இயக்கம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News