அத்தாணி அருகே விஷம் குடித்த முதியவர் உயிரிழப்பு
அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (எ) கருப்புசாமி (வயது 61). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனால் மருத்துவமனையில் சின்னசாமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.எனினும், இடுப்பு பகுதியில் உள்ள காயத்தில் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் கடந்த 25ம் தேதி இரவு சின்னசாமி கலைக்கொல்லி பூச்சி மருந்தை சாப்பிட்டார். உயிருக்கு போராடிய நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னசாமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிந்தார். இதுகுறித்து, சின்னசாமியின் மகன் பகவதி அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.