கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை: ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகளின் தொகுப்பை இங்கு காண்போம் ‌.

Update: 2023-05-09 13:00 GMT

கோப்புப் படம்.

கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை:-

பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (75), விவசாயி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் மதியம் தோட்டத்திற்கு சென்ற கிருஷ்ணசாமி அங்குள்ள தண்ணீர் இல்லாத திறந்த வெளி கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதைக்கண்ட குடும்பத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி கிருஷ்ணசாமியை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ண சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு:- 

அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தென்ன ரசு (வயது 30). இவர் ஈரோட்டில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தென்னரசு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ரோட்டில் சென்றபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தென்னரசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சாக்கடையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு:- 

கோபி அருகே உள்ள கடுக்காம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளாங்கோவில் ஆலமரத்து பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு சாக்கடை திட் டில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது தவறி சாக்கடையில் விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாக்கடையில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காககோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News