பெருந்துறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2024-05-26 09:15 GMT

Erode news- கைது செய்யப்பட்ட சென்னியப்பன்.

Erode news, Erode news today- பெருந்துறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 66). இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் , போலீசார் சென்னியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது,  சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் நைசாக பேசி சென்னியப்பன் பொம்மை தருவதாகக் கூறி வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதற்குள் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகளை காணவில்லை என சிறுமியின் தாயார் தேடிப் பார்த்தார்.

அப்போது சென்னியப்பன் வீட்டில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் வந்ததையடுத்து. பெற்றோர் அங்கு, சென்று பார்த்த போது சிறுமிக்கு சென்னியப்பன் பாலியல் தொல்லை கொடுத்திருந்துள்ளார்.  விசாரணையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதால், சென்னியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சென்னியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News