பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.38.04 லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.38.04 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Update: 2023-09-26 01:30 GMT

காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கட்கிழமை நேற்று நடைபெற்றது.

காணிக்கை எண்ணும் பணி கோவில் செயல் அலுவலர் மேனகா, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், இந்து அறநிலைத் துறை ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா, கண்காணிப்பாளர் பாலசுந்தரி மற்றும் வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், பக்தர்கள், கோவில் அலுவலர்கள் ஆகியோர் காணிக்கைகளை எண்ணினர். 

இதில் காணிக்கையாக மொத்தம் ரூ.38 லட்சத்து 4 ஆயிரத்து 565ம், 162 கிராம் தங்கமும், 348 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News