கோபி டி.என்.பாளையத்தில் குஷ்பு உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்
Erode news- மகளிர் உரிமைத்தொகையை தவறாக பேசியதாக கண்டனம் தெரிவித்து கோபி அருகே டி.என்.பாளையத்தில் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
Erode news- குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
Erode news, Erode news today- மகளிர் உரிமைத்தொகையை தவறாக பேசியதாக கண்டனம் தெரிவித்து கோபி அருகே டி.என்.பாளையத்தில் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மகளிர் ஆணைய தலைவியும், பா.ஜனதா நிர்வாகியுமான குஷ்பு அளித்த ஒரு பேட்டியில்,திமுக அரசு மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1000 பிச்சை போட்டால் பெண்கள் அவர்களுக்கு வாக்கு அளித்து விடுவார்களா? என்று குடும்பத்தலைவிகளுக்கு, தமிழக அரசு வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி இருந்தார். குஷ்புவின் இந்த கருத்துக்கு திமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் அத்தாணி - சத்தியமங்கலம் சாலையில் அண்ணா சிலை முன்பு திமுக ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமையில் கட்சியினர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குஷ்புவை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சாலையில் குஷ்புவின் உருவ பொம்மையை போட்டு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.
இதனால் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் வாணிப்புத்தூர் பேரூர் திமுக செயலாளர் சேகர், பேரூராட்சி தலைவர் சிவராஜ் உள்பட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.