இடைத்தேர்தலில் வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபடும் திமுக: எல்.கே.சுதீஷ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என்று தேமுதிக மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என்று தேமுதிக மாநில துணை செயலாளர் எல்கேசுதீஷ் குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேமுதிக வேட்பாளர் எஸ். ஆனந்தை ஆதரித்து மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மணல்மேடு சூரம்பட்டி பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேமுதிக ஆரம்பித்து 18 ஆண்டுகள் ஆகிறது. பல பொதுத் தேர்தல்களிலும் 50 இடைத்தேர்தல்களும் தேமுதிக போட்டியிட்டுள்ளது. ஆனால் இதுவரை வரலாறு காணாத முறைகேடுகளில் திமுக காங்கிரஸ் கூட்டணியினர் ஈடுபட்டு வருகின்றனர். தினசரி பெண்களை ஆடு மாடுகளைப் போல அழைத்துச் சென்று திமுக காங்கிரஸ் பணிமனையில் அடைத்து வைக்கின்றனர். அவர்களுக்கு ரூ.500 ம் ஆண்களுக்கு ரூ.1000 தினசரி வழங்குகின்றனர்.
இதைத்தவிர மது, பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. ஈரோட்டில் பல இடங்களில் அத்தகைய மது பாட்டில்கள் காணப்படுகின்றன. நாங்கள் தான் அதை சுத்தம் செய்கிறோம். தேமுதிக நிர்வாகிகளுக்கு எந்த மிரட்டலும் இல்லை. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டதாக செய்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தில் 15 நாட்களுக்கு முன்பே நாங்கள் திமுக முறைகேடுகள் சம்பந்தமாக முறையிட்டுள்ளோம். கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினரை இங்கு அனுப்ப வேண்டும். திமுக காங்கிரஸ் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்று புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியாவது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை தடுத்து நேர்மையாக தேர்தலை நடத்த வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்