ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் இன்று (25ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஈரோடு சூரம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்.
ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் இன்று (25ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகளை வழங்காததை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று (25ம் தேதி) காலை சூரம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். சுரேஷ் வரவேற்றார். இதில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஈரோடு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் சுசி ஆறுமுகம் மற்றும் பகுதி செயலாளர்கள், மாவட்ட துணை செயலாளர் தாமரை செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், தமிழ்ச்செல்வன் மற்றும் மகளிர் அணி, தொண்டர் அணி, வர்த்தகர் அணி, மாணவர் அணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மெய்யழகன் நன்றி கூறினார்.