ஈரோடு இடைத்தேர்தல்: வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ, கலைநிகழ்ச்சி
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ மற்றும் கலைநிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா அருகில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்ட வாக்களார் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சி மற்றும் கோபிசெட்டிபாளையம் கலைகுழுவினரால் நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினையும் பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்காக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
அதனைத் தொடர்ந்து, "வாக்களிப்பது ஜனநாயக் கடமை", "வாக்களிப்போம். வாக்களிப்போம்", "பாரதத்தின் பெருமை ஓட்டுரிமை" உள்ளிட்ட 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாள்தோறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மேலும், கையெழுத்து இயக்கம் மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் கோலங்கள் வரைந்தும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமையல் எண்ணெய் கேன் மற்றும் குடிநீர் பாட்டில் ஆகியவற்றில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோபிசெட்டிபாளையம் கலைக்குழுவின் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாநகராட்சி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட்ட வாக்களார் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சி மற்றும் கோபிசெட்டிபாளையம் கலைகுழுவினரால் நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பொன்மணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவவர் சண்முகவடிவு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.